அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

மாணவிகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பள்ளியில் சிறந்த முறையில் ஓவியம் கற்றுத்தரப்படுகிறது. அனைத்து மாணவிகளும் ஆர்வமுடன் கற்றுக்கொள்கின்றனர். மேலும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அவ்வபொழுது நடைபெறும் ஓவுிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

           24.01.2017 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பள்ளியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஓவிய கண்காட்சி அரங்கினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் திறந்து வைத்து மாணவிகளின் படைப்புகளை கண்டுகளித்தார்.மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவிகளை பாராட்டினார்.