அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

தலைமைஆசிரியையின் மடல்

"அறிவே ஆற்றல்", "உழைப்பே உயர்வு", "உள்ளத்தனையது உயர்வு" என்ற நோக்கத்தோடு அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது எமது திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகும். இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் கடலூரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து இங்கே பயின்று வருகின்றனர்.

மாணவிகளுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி,       பொதுஅறிவு ஆகியவற்றினை பரிவுடனும், அக்கறையுடனும் செயல்படும் திறமைமிக்கக நல்ல ஆசிரியபெருமக்களால் போதிக்கப்படுகிறது. மாணவிகளின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றும் ஆசிரியர்கள் இருப்பதினால் எம் பள்ளி மாணவிகள் பல்துறைகளிலும் வெற்றிகளையும், பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.


எம் மாணவிகளுக்கு பாடதிட்டம் மட்டுமின்றி அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர ஏதுவாக வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்படுகிறது.
மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியினை சிறந்த வல்லுனர்களைக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது.

நாட்டு நலன், சமூக சிந்தனை மற்றும் சேவை மனப்பான்மையினை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு நாட்டு நலப்பணித்திட்டம், இளம் செஞ்சிலுவை சங்கம்,சாரணியர் இயக்கம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓவியம்,இசை, தையல் மற்றும் கைவேலைப்பாடுகள் ஆகியவற்றில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.


இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு பசுமைப்படை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.விளையாட்டில் சிறந்த விராங்கனைகளாக திகழ ஏதுவாக உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 


மாணவிகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நகர சுகாதார மையத்துடன் இணைந்து மாணவிகளின் நலனில் முழு அக்கறை எடுத்துக்கொள்ளப்படுகிறது.வளர் இளம் பெண்களுக்கு தேவையான கவுன்சிலிங் மருத்துவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களால் அவ்வபொழுது அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த கல்வி ஆண்டில் 2016-2017 பொதுத்தேர்வில் நமது இலக்கு 100 சதவிகிதம் என்ற இலட்சியத்துடன் சாதாரண மாணவியையும் சாதனை மாணவியாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.
"வாழ்க எம் பள்ளி"  "வளர்க அதன் புகழ்"

நன்றி.