அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
பொற்றோர்கள் கவனத்திற்கு
 1. நாள்தோறும் குழந்தைகளின் நாள்குறிப்பேட்டைத் தவறாமல் பார்த்துக்  கையொப்பமிடுதல் வேண்டும்.
 2. குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
 3. வீட்டுப்பாடங்களைச் சரிவர செய்திட குழந்தைகளுக்கு உதவிட வேண்டும்.
 4. குழந்தைகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருகைபுரிய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தல் வேண்மடும்.
 5. பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் தவராமல் கலந்து கொள்ளல் வேண்டும்.
 6. குழந்தையின் உடல்நலம் தொடர்பான விவரங்களை வகுப்பாசிரியர், தலைமைஆசிரியரிடம் தவராமல் தெரிவித்தல் வேண்டும்.
 7. குழந்தைகள் நன்கு கல்வி பயிலவும், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் பெற்றோர்கள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
 8. தங்கள் குழந்தைகளின் கற்றல் திறனை அவ்வப்போது வகுப்பாசிரியரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
 9. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மட்டுமின்றி மற்ற விருப்பமான துறைகளிலும் முன்னேற ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.
 10. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடை, உடை, பாவணைகளை அன்றாடம் கண்காணித்தல் வேண்டும்.
 11. வயதில் மூத்த பிள்ளைகள் செய்த தவற்றினை இளைய பிள்ளைகள் முன்னிலையில் பேசி மரியாதைக் குறைவாக நடத்துதல் கூடாது.
 12. வீட்டில் குழந்தைகள் கைபேசி, மடிக்கணிணி, கணிணி, இணையதளம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்துவதை கண்காணித்தல் வேண்டும்.
 13. மற்ற குழந்தைகளுடன் தங்களது குழந்தைகளை அடிக்கடி ஒப்பிட்டுப் பேசுவதை தவிர்த்தல் நன்று.