அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

மதுரையில் அன்று நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் நமது பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி செல்வி என்பார் கடலூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பில் கலந்துகொண்டு தனது படைப்பினை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வைத்திருந்தார். பார்வையாளர் மற்றும் நடுவர்களுக்கு தனது படைப்பின் நோக்கம் குறித்தும், அதனை தயாரிக்கும் முறையையும் விளக்கிக்காட்டினார். சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி, செயல்விளக்கம் அளித்தமைக்காக பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் மாணவியை பாராட்டினர். இம்மாணவி ஏற்கனவே மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்றவர் ஆவார்.