அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

1.காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
2.பள்ளிக்கு நாள்தோறும் சீருடையில் வருதல் வேண்டும்.
3.பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை புரிதல் வேண்டும்.
4.வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தினைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
5.பாடபுத்தகங்கள், பாடநோட்டுகள் மற்றும் கையேட்டினை நாள்தோறும் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
6.கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களைப் பாடவாரியாக கையேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
7.கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை அந்தந்தப் பாட ஆசிரியர்களிடம் நிறைவு செய்து தவறாமல் ஒப்படைத்தல் வேண்டும்.
8.பள்ளியின் உடைமைகளைப் பாதுகாத்திடல் வேண்டும்.
9.பள்ளித் தேர்வு நாள்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்திடல் வேண்டும்.
10.தவிர்க்க இயலாத காரணத்தால் நீண்ட விடுப்பு எடுக்க நேரிடின், மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
11.ஆசிரியர்கள் வகுப்பைறக்குள் நுழையும்போது அமைதியாக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
12.அமைதியாகவும், பணிவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளல் வேண்டும்.
13.பேச்சு, செயல், எண்ணம் போன்றவற்றில் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும்.
14.பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தோர்களிடம் பணிவாக நடந்து கொள்ளல் வேண்டும்.
15.பள்ளியில் செயல்படும் இணைச்செயல்பாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளல் வேண்டும்.
16.கைபேசி, தொகை ரூ.10க்கு மேல் எக்காரணம் கொண்டும் பள்ளிக்குக் கொண்டு வருதலைத் தவிர்த்தல் வேண்டும்.
17.பாதுகாப்புக் கருதி விலையுயர்ந்த அணிகலன்கள் அணிந்து வருதலைத் தவிர்த்தல் வேண்டும்.
18.தலைமைஆசிரியர், வகுப்பாசிரியரின் அனுமதியில்லாமல் பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் செல்லுதல் கூடாது.
19.ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன்பும், மதிய உணவு இடைவேளை மற்றும் பள்ளி முடிந்த பின்பும் வகுப்பறையிலோ, தாழ்வாரத்திலோ அல்லது விளையாடுமிடத்திலோ மாணவிகள் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடுவதோ, கையால் குத்திக் கொண்டு விளையாடுவதோ, கூர்மையான பொருள்களையோ, கனமான பொருள்களையோ தூக்கிப்போட்டு விளையாடுதல் கூடாது.
20.மாணவிகள் பள்ளியில் நட்புணர்வுடனும் ஒருவருக்கொருவர் உதவிடும் மனப்பாங்குடனும் நடந்துகொள்ள வேண்டும்.