அ.ம.மே.நி.பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் 'எழுத்து அறிவித்தவன் இறைவன்'

விளையாட்டுப்போட்டிகள்

   மாணவர்களின் உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் நோக்குடன் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் குடியரசுதின,  பாரதியார் தின குழுப் போட்டிகள்,  தடகளப் போட்டிகள் குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரையும் புதிய விளையாட்டுப் போட்டிகள் குறுவட்ட, கல்வி மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரையும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்காணும் விளையாட்டுப் போட்டிகளில் கல்வி மாவட்ட, மண்டல, மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்கும், வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் விளையாட்டுக்கான தனி இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.இப்பள்ளியில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு தனியே சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறந்த விளையாட்டு விராங்கனைகளாக திகழ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.